/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போஸ்ட் ஆபீஸ் சுவர் சீரமைக்க எதிர்பார்ப்பு
/
போஸ்ட் ஆபீஸ் சுவர் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 11, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடத்தை அடுத்த, கே.என்., புரம் பஸ் ஸ்டாப் அருகே போஸ்ட் ஆபீஸ் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கு முன் பெய்த மழையின் போது போஸ்ட் ஆபீஸ் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து, சுற்றுச்சுவர் பராமரிக்கப்படவில்லை.
மாறாக, இடிந்த சுவரின் பாகங்கள் அகற்றப்படாமல் இடிந்த இடத்தில் அப்படியே கிடக்கிறது. இதனால், போஸ்ட் ஆபீஸ், பாதுகாப்பு இன்றி திறந்த நிலையில் உள்ளது. தபால் துறையும் இது குறித்து கண்டுகொள்ளாமல் சுணக்கம் காட்டி வருகிறது. எனவே, இடிந்த பாகங்களை அகற்றி, சுற்றுச்சுவரை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.