/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னார் வனப்பகுதியில் களப்பயணம்
/
சின்னார் வனப்பகுதியில் களப்பயணம்
ADDED : செப் 01, 2025 07:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலை ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சின்னார் வனப்பகுதிக்கு களப்பயணம் சென்றனர்.
உடுமலை ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி, ஆனைமலை புலிகள் காப்பகம், ஆரண்யா அறக்கட்டளை சார்பில் சின்னார் வனப்பகுதியில் ரோட்டோரங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி மாணவர்கள் ரோட்டோரங்களில் உள்ள பிளாஸ்டிக் பை கழிவுகள், கண்ணாடி பாட்டில் துண்டுகளை அப்புறப்படுத்தினர். உடுமலை வனச்சரகர் வாசு முன்னிலை வகித்தார்.
வனவர் மாரிமுத்து, வனத்துறை அலுவலர்கள், கவுரவ வன உயிரின பாதுகாவலர் நந்தினி களப்பயணத்தில் பங்கேற்றனர்.

