/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொட்டியில் மாசடைந்த நீரை கண்டறிந்து அப்புறப்படுத்துங்க!
/
தொட்டியில் மாசடைந்த நீரை கண்டறிந்து அப்புறப்படுத்துங்க!
தொட்டியில் மாசடைந்த நீரை கண்டறிந்து அப்புறப்படுத்துங்க!
தொட்டியில் மாசடைந்த நீரை கண்டறிந்து அப்புறப்படுத்துங்க!
ADDED : ஜன 16, 2024 10:47 PM
உடுமலை;வனப்பகுதிகளில் ஆங்காங்கே உள்ள தரைமட்டத் தொட்டிகளில், மாசடைந்த தண்ணீர் தேக்கமடைந்திருந்தால், அவற்றை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரங்கங்களில், வனவிலங்குகள் இடம்பெயர்வை தடுக்கும் வகையில், தடுப்பணை மற்றும் கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பண்ணை குட்டைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, 'சோலார் பம்ப்' உதவியுடன், தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதன்பின், குழாய் இணைப்பு வாயிலாக தடுப்பணைகள் நிரப்பப்படுகின்றன.
கடந்த சில தினங்களாக, மழையின் தாக்கம் பரவலாக அதிகரித்ததால், நீராதாரமிக்க பகுதிகளில் தண்ணீர் வரத்து காணப்பட்டது. தற்போது, மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், தரைமட்ட தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது.
பாசி படிந்து காணப்படும் தண்ணீரைப் பருகும் வனவிலங்குள் பாதிப்பு அடையும் நிலை உருவாகியுள்ளது. எனவே, அவற்றை கண்டறிந்து, அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் புழுக்கள் உற்பத்தியாகின்றன. இதனை பருகும் வனவிலங்குகள் பாதிப்படைகின்றன. மாசடைந்த தண்ணீரை அகற்றம் செய்வது அவசியம்,' என்றனர்.

