/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசிக்குள் வராமல் 'டிமிக்கி'; தனியார் பஸ்களுக்கு அபராதம்
/
அவிநாசிக்குள் வராமல் 'டிமிக்கி'; தனியார் பஸ்களுக்கு அபராதம்
அவிநாசிக்குள் வராமல் 'டிமிக்கி'; தனியார் பஸ்களுக்கு அபராதம்
அவிநாசிக்குள் வராமல் 'டிமிக்கி'; தனியார் பஸ்களுக்கு அபராதம்
ADDED : ஜூன் 13, 2025 11:36 PM

அவிநாசி; காலை மற்றும் மாலை நேரங்களில், அவிநாசி புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நிற்பதை தவிர்த்து, சேலம் - கொச்சி பைபாஸ் சாலை வழியாக, கோவை, ஈரோடு, கோபி, சத்தி, மைசூர், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். போராட்டங்களும் நடத்தினர்.
நேற்று அவிநாசி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் குமரன் சேலம் - கொச்சி பைபாஸ் ரோட்டில் ஆய்வு செய்தார்.
கோவையிலிருந்து கோபி நோக்கி அவிநாசி வழியாக செல்லும் தனியார் பஸ்,அவிநாசி நகருக்குள் வராமல் பைபாஸ் சாலையில் வந்தது.
பஸ்சை தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர் குமரன் பஸ்சுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினார்.
தொடர்ந்து இரண்டு தனியார் பஸ்களுக்கும் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.