/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆல மரத்தில் பரவிய தீ; அணைத்ததால் தப்பியது
/
ஆல மரத்தில் பரவிய தீ; அணைத்ததால் தப்பியது
ADDED : செப் 16, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்; பெருமாநல்லுார் ஊராட்சி கிராமங்களில் சேகரமாகும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் சரியாக அகற்றுவதில்லை. என கூறப்படுகிறது.
இதனால், தேங்கி கிடக்கும் குப்பையில் அவ்வப்போது மர்ம நபர்கள் தீவைத்து விடுகின்றனர். அவ்வகையில், கடந்த சனிக்கிழமை நடந்த வார சந்தை குப்பை அகற்றப்படாமல் இருந்துள்ளது. அங்குள்ள ஆலமரம் அருகில் குவிந்து கிடந்த குப்பையில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ வேகமாக பரவி மரத்திலும் தீப்பிடித்தது.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீ பரவாமல் அணைத்ததால், ஆல மரம் தப்பியது.

