ADDED : ஜன 26, 2024 12:43 AM

உடுமலை:கோடை காலத்தில், வனத்தீயினை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரகத்தில், கோடை காலத்தில் வனத்தீயை கட்டுப்படுத்துவது குறித்தும், வனத்தீயை ஏற்படாமல் தடுப்பது, தீ ஏற்பட்டாமல் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு முகாம், அமராவதி வனச்சரக அலுவலகத்தில் நடந்தது.
அமராவதி வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கோபால் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
போலீசார், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள், மின் வாரியம், பொதுப்பணித்துறை மற்றும் வனக்காவலர்கள், மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.
இதில், கோடை காலத்தில் வனப்பகுதியில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்துவது, தீ விபத்து ஏற்படாமல் எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து, தீயணைப்புத்துறை சார்பில், தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது.
அதன் பின், அமராவதி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்க்கு வனத்துறை சார்பாகவும், தீயணைப்புத்துறை சார்பாகவும் தீ தடுப்பு விளக்க முகாம் நடந்தது.

