/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! பொங்கல் விழாவில் மாணவியர் அமர்க்களம்
/
ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! பொங்கல் விழாவில் மாணவியர் அமர்க்களம்
ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! பொங்கல் விழாவில் மாணவியர் அமர்க்களம்
ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! பொங்கல் விழாவில் மாணவியர் அமர்க்களம்
ADDED : ஜன 16, 2024 11:33 PM

திருப்பூர்;திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் அனைத்து துறை பேராசிரியர், மாணவியர் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாணவியர் பாரம்பரிய உடையுடன் வந்தனர். புதுப்பானை வைத்து பொங்கலிட்டு, மாணவியர் ஒற்றுமையுடன் ஒவ்வொரு துறைக்கு பொங்கலை பகிர்ந்து அளித்தனர்.
கும்மியாட்டம்
'எனக்கு தெரிந்த மாதிரி கும்மி ஆடிக்கிறேன். எப்படி ஆடினாலும் எனக்கு குத்தாட்டம் தான்' வருகிறது என கும்மியாட்டத்தின் நடுவே மாணவி ஒருவர் கமென்ட் அடிக்க அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது. 'நீ என்ன பாத்துத்தானே ஆடுற. அய்யய்யோ கண்டுபிடிச்சிட்டீயா' என, மாணவியர் இருவர் பேசிக்கொண்டனர்.
'கட்டுறது தான் கட்டுறீங்க... கொஞ்சம் பானைய இறக்கிக் கட்ட கூடாதா,' என சத்தம் கேட்க, அங்கே எட்டி பார்த்தோம். உறியடி போட்டி. துணியை கண்ணில் கட்டிய பெண்ணிடம், கொஞ்சம் கூட 'கேப்' இல்லாம கட்டுனா எப்பூடுறிடி... ஒண்ணுமே தெரியல'' என சொல்ல...துணிச்சலாக கயிறு கட்டி வந்த மாணவி ஒருவருக்கு, சிலர் தவறாகவும், பெரும்பாலானோர் வேறு வழியையும் காட்டினர். ஒரே ஒரு மாணவி, 'நீ நல்லா தான் வர்ற' என சொன்னார். ஆனால், பாவம் உறியடிக்க வந்த மாணவி, காதுக்கு அதுவும் எட்டவில்லை.
காலை முதல் மாலை வரை மாணவியர் உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடி, கரகாட்டம், விளையாட்டு போட்டி, ஆட்டம் பாட்டத்துடன் நிறைவு செய்தனர்.
உண்மையில் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து, கவலைகளை மறந்து கொண்டாடி மகிழ்ந்தால் எல்லா நாளும் பண்டிகை தானே. மனநிறைவுடன் நாமும் கல்லுாரியை விட்டு நகர்ந்தோம்.

