ADDED : ஜன 10, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் வந்த 'கேலோ இந்தியா' விழிப்புணர்வு பிரசார வாகனம், பள்ளிகளுக்கு பயணிக்க, கொடியசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று இந்த வாகனம் திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரிக்கு வந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி கொடியசைத்து வாகன இயக்கத்தை துவக்கி வைத்தனர். மாவட்ட அளவில் நடந்த மினி மாரத்தான், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சி.இ.ஓ., கீதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

