/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில டென்னிஸில் தங்கம் பிளாட்டோஸ் பள்ளி அபாரம்
/
மாநில டென்னிஸில் தங்கம் பிளாட்டோஸ் பள்ளி அபாரம்
ADDED : ஜன 19, 2024 04:19 AM

திருப்பூர், : மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் பிளாட்டோஸ் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
கோவையில் உள்ள குளோபல் பள்ளியில் மாநில டென்னிஸ் கிரீன் டாட் பால் போட்டிகள் நடைபெற்றது. இதில் 12 மற்றும் 14 வயதிற்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் பிளாட்டோஸ் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் பிரனேஷ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். 10 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஐந்தாம் வகுப்பு மாணவி மோகிதாஸ்ரீ முதலிடம் பிடித்தார்.
சாதித்த மாணவர்களையும், பயிற்சியாளர்கள் சந்தோஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரையும், பிளாட்டோஸ் பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், பள்ளி அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

