ADDED : ஜன 26, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பொங்கலுார், தில்லை நகரை சேர்ந்தவர் சீனிவாச ராவ்; இவரது மகன் எனுாப் சந்தீப், 35, மனைவி ஸ்ரீஷா 30, பேரன் அயன், 6 ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று காலை, குடும்பத்தினருடன் பல்லடத்தில் நடந்த உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சீனிவாசராவ், அயன் ஆகியோர் ஒரு பைக்கிலும், எனுாப், ஸ்ரீஷா மற்றொரு பைக்கிலும் வந்து கொண்டிருந்தனர். அப்போது, சமத்துவபுரத்தில் நின்று கொண்டிருந்த லாரியை கடக்க முயன்றனர். அதே திசையில் வந்த மற்றொரு லாரி மோதி சீனிவாசராவ், அயன் ஆகியோர் அதேயிடத்தில் இறந்தனர்.
தனது கண் முன்னே தந்தையும், மகனும் இறந்தது கண்டு எனுாப் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்தது. டிரைவர் தலைமறைவானார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

