/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்ந்த 'வேகத்தடை'... அயர்ந்தால் பெயரும் 'தாடை'
/
உயர்ந்த 'வேகத்தடை'... அயர்ந்தால் பெயரும் 'தாடை'
ADDED : பிப் 06, 2024 01:21 AM

சுகாதாரக் கேடு
உகாயனுார் ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகே கொட்டப்பட்டுள்ள குப்பையை அள்ள வேண்டும். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- ரவீந்திரன், உகாயனுார். (படம் உண்டு)
தடுமாற்றம்
திருப்பூர், ஜெய்வாபாய் ஸ்கூல் சந்திப்பு, மிலிட்டரி காலனி மூன்றாவது வீதியில் வேகத்தடை உயரம் அதிகமாக உள்ளது. நிறுத்த குறியீடுகள் வரையவில்லை. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
- வின்சென்ட்ராஜ், ராயபுரம். (படம் உண்டு)
குப்பைக்குவியல்
திருப்பூர், மூன்றாவது வார்டு, பழனிசாமி நகர் தரைப்பாலம் அருகே குப்பை குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது; சுத்தம் செய்ய வேண்டும்.
- ஈஸ்வரமூர்த்தி, பழனிசாமிநகர். (படம் உண்டு)
வழியும் கழிவுநீர்
திருப்பூர், பி.கே.ஆர்., காலனி மெயின் ரோட்டில், கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. பாதசாரிகள் அதனை மிதித்தபடியே நடக்க வேண்டியுள்ளது.
- தேவராஜ், பி.கே.ஆர்., காலனி. (படம் உண்டு)
செல்ல சிரமம்
திருப்பூர், பி.என்.,ரோடு, 2வது வீதி, டாலர் நிறுவன எதிர் வீதியில் ரோடு போட, ஜல்லி கொட்ட குழி தோண்டி அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். வாகன ஓட்டிகள் சென்று வர முடியவில்லை.
- ராஜன், பி.என்., ரோடு. (படம் உண்டு)
ஒளிராத விளக்கு
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் - பாளையக்காடு பஸ் ஸ்டாப் இடையே தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்ற வேண்டும்.
- கிரிராஜ், பாளையக்காடு. (படம் உண்டு)
திருப்பூர், ஸ்ரீ சக்தி தியேட்டர் ரவுண்டானா - வளம் பாலம் சந்திப்பு சாலையில் தெருவிளக்கு எரிவதில்லை. புதிய விளக்கு பொருத்த வேண்டும்.
- கணேசமூர்த்தி, மெஷின் வீதி. (படம் உண்டு)
ரியாக் ஷன்
அடைப்பு அகற்றம்
திருப்பூர், 20வது வார்டு, இளங்கோ நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது கழிவுகள் அகற்றப்பட்டது.- ரஞ்சித், இளங்கோ நகர். (படம் உண்டு)