/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவிலில் கல்வெட்டுகள் அகற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி
/
அவிநாசி கோவிலில் கல்வெட்டுகள் அகற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி
அவிநாசி கோவிலில் கல்வெட்டுகள் அகற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி
அவிநாசி கோவிலில் கல்வெட்டுகள் அகற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி
ADDED : பிப் 06, 2024 01:59 AM

அவிநாசி;அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், கல்வெட்டுகள் அகற்றப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், கடந்த 2ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது. வெளிப்பிரகாரத்தில் திருமாளிகை பத்தி அமைத்தல், கல் தளம் என பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 1983 ஆக., 18ம் தேதி ஆண்டு மடப்பள்ளியை, தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் கட்டி கொடுத்ததற்கான கல்வெட்டு, அம்மன் ராஜகோபுரம் அருகே இருந்தது. திருப்பணியின் போது, அந்தக் கல்வெட்டு உடைத்து அகற்றப்பட்டது.
இதையறிந்த அப்போது அறங்காவலராக இருந்த ராயப்பன் என்பவரின் பேரன் சத்தியமூர்த்தி கூறுகையில், ''அந்த கல்வெட்டை மீண்டும் நிறுவ வேண்டும். பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்ற தொல்லியல் துறை அறிவுறுத்தலின்படி, இது போன்ற செயல்களை கோவில் நிர்வாகம் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
கோவில் உள்பிரகாரத்தில், செந்திலாண்டவர் சன்னதி பக்கவாட்டு சுவரில், 1954ல் சென்னை, திருவல்லிக்கேணியில் செயல்படும் முருகன் திருவருட் சங்கத்தினர் நிறுவிய,'அவிநாசி திருப்புகழ்' பாடல் பொறித்த கல்வெட்டும் அகற்றப்பட்டது. அது, திருக்கல்யாண உற்சவ மண்டபம் அருகே குப்பையோடு குப்பையாக போட்டு வைக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் கூறுகையில், ''கோவிலில், எங்கெங்கு கல்வெட்டு இருந்ததோ, அவை மீண்டும் அந்தந்த இடத்திலேயே நிறுவப்படும்,'' என்றார்.