/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளுக்கு இடையிலான யோகா; 167 மாணவர்கள் பங்கேற்பு
/
பள்ளிகளுக்கு இடையிலான யோகா; 167 மாணவர்கள் பங்கேற்பு
பள்ளிகளுக்கு இடையிலான யோகா; 167 மாணவர்கள் பங்கேற்பு
பள்ளிகளுக்கு இடையிலான யோகா; 167 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 25, 2025 09:24 PM

உடுமலை; மண்டல அளவில் சர்வதேச மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையிலான யோகா போட்டி உடுமலையில் நடந்தது.
உடுமலை அமேசான் பப்ளிக் பள்ளியில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை கொண்ட மண்டல அளவிலான சர்வதேச மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான யோகா போட்டி நடந்தது. போட்டியில் 14, 17, 19 வயதினருக்கான பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு தனிப்பிரிவுகளில் நடத்தப்பட்டன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 167 மாணவர்கள் பங்கேற்றனர்.
குழு யோகா, ஆர்டிஸ்டிக் யோகா, ரிதமிக் யோகா உள்ளிட்ட மூன்று போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கவுன்சில் பார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிபிகேட் எக்சாமினேஷன்ஸ் (சிஐஎஸ்சிஇ) சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.