/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்கண்ணா கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கு
/
சிக்கண்ணா கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கு
ADDED : செப் 30, 2025 01:11 AM

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிக துறை சார்பில், டில்லி அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் நிதி உதவியுடன் நிலையான மற்றும் திறன்மிகு ஜவுளித்துறையில் புதுமைகள் என்ற தலைப்பில், இருநாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
துறைத்தலைவர் பேராசிரியை கற்பகம் சின்னம்மாள் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஆய்வுக்கட்டுரை தொகுப்பின் முதல் பிரதியை பின்லாந்து நாட்டு விஞ்ஞானி அரவின் பிரின்ஸ் வெளியிட்டார். இலங்கையை சேர்ந்த விக்ரம சிங்கே பெற்றுக்கொண்டார்.
இவர்கள் உட்பட தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் யுவராஜ், அம்சமணி, செந்தில்குமார், மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரகாஷ், ஆந்திராவை சேர்ந்த குபேர சம்பத்குமார், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளில் இருந்தும் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என, 150 பேர் தங்கள் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பேராசிரியைகள் ஜெயலட்சுமி, ஜெமினா ராணி, கோகிலவாணி மற்றும் திவ்யலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

