/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலாசார பேரவை சார்பில் கம்பன் கழகம் துவக்கம்
/
கலாசார பேரவை சார்பில் கம்பன் கழகம் துவக்கம்
ADDED : அக் 14, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி பழனியப்பா பள்ளியில் அவிநாசி தமிழர் பண்பாடு கலாசார பேரவை அறக்கட்டளை சார்பில், கம்பன் கழகம் துவக்க விழா நடைபெற்றது.
பள்ளி தாளாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் நடராஜன், பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவிநாசி கம்பன் கழக செயலாளர் ரக்சகன் மெய்ஞ்ஞான மூர்த்தி வரவேற்றார். செயல் தலைவர் பழனிசாமி தலைமையுரை ஆற்றினார்.
பொருளாளர் ராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர் கணேசன், துணை தலைவர் சுப்பிரமணியம், அரசு கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

