/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சோழீஸ்வரர் கோவிலில் 26ல் கும்பாபிேஷகம்
/
சோழீஸ்வரர் கோவிலில் 26ல் கும்பாபிேஷகம்
ADDED : பிப் 06, 2024 01:43 AM
உடுமலை;உடுமலை முத்தையபிள்ளை லே அவுட்டில், அகிலாண்டேஸ்வரி சமேத சோழிஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிேஷகம் நடத்தப்படவுள்ளது.
வரும் 23ம் தேதி மாலை, 6:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிேஷக விழா தொடங்குகிறது. தொடர்ந்து 24ல் முதற்கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, போன்றவையும், 25ல், இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 26ம் தேதி காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை, 9:00 மணிக்கு அனைத்து கோபுர விமானம் மற்றும் பரிவாரங்களுக்கும், ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை உடனமர் ஸ்ரீ சோழிஸ்வர சுவாமிக்கு மகா கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.