ADDED : ஜூன் 19, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊதியூர், சங்கராண்டம்பாளையம், பூங்கா துரையில் உரிய அனுமதியின்றி லாரியில், கருங்கற்கள் கடத்தப்படுவதாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வருவாய் ஆய்வாளர் ரங்கநாயகி தலைமையிலான வருவாய் துறையினர், லாரியை மடக்கி பிடித்து விசாரித்தனர். லாரியில், ஆறு யூனிட் கற்கள் இருந்தது தெரிந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத காரணமாக லாரியை பறிமுதல் செய்து தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. புகாரின் பேரில், சந்தானகிருஷ்ணன், 46 என்பவர் மீது வழக்குபதிவு செய்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.