/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோள பயிர்கள் சேதம்; காட்டுப்பன்றிகளால் கவலை
/
மக்காச்சோள பயிர்கள் சேதம்; காட்டுப்பன்றிகளால் கவலை
மக்காச்சோள பயிர்கள் சேதம்; காட்டுப்பன்றிகளால் கவலை
மக்காச்சோள பயிர்கள் சேதம்; காட்டுப்பன்றிகளால் கவலை
ADDED : ஜூன் 03, 2025 12:29 AM
உடுமலை; காட்டுப்பன்றிகளால், பயிர் சாகுபடி சேதம் அடைவது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்க பெருமாள்புதுார் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் வட்டாரம் பெருமாள்புதுார் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. நெல், கரும்பு, மக்காச்சோளம் மற்றும் காய்கறி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், விளைநிலங்களில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது.
சமீபத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டமாக புகுந்து சேதப்படுத்தியுள்ளன. இதனால், ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கவும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.