/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் 'மெகா' பள்ளங்கள் விபத்துகள் அதிகரிப்பு
/
தேசிய நெடுஞ்சாலையில் 'மெகா' பள்ளங்கள் விபத்துகள் அதிகரிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் 'மெகா' பள்ளங்கள் விபத்துகள் அதிகரிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் 'மெகா' பள்ளங்கள் விபத்துகள் அதிகரிப்பு
ADDED : ஜன 26, 2024 12:31 AM
உடுமலை:தேசிய நெடுஞ்சாலையில், அதிகரித்துள்ள, 'மெகா' பள்ளங்களால், விபத்துகள் ஏற்பட்டும், பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை நகரின் மையப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில், பல ஆண்டுகளாக புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
வடிகால் அமைப்பும் மாயமாகியுள்ளதால், மழைக்காலங்களில், வெள்ள நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், தண்ணீர் தேங்குகிறது. இதனால், மழைக்கு பிறகு, தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில், பள்ளம் ஏற்படுகிறது.
சீரமைப்பு செய்யாமல் விடுவதால், தொடர் போக்குவரத்து காரணமாக மெகா பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில், நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், ரோடு படுமோசமாக மாறி விட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகே, குழாய் சீரமைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழி, முறையாக மூடவில்லை.
இதனால், அப்பகுதி மேடும், பள்ளமாக மாறி விட்டது; எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டுநர்கள் குழியின் மத்தியில், குச்சியை நட்டு வைத்துள்ளனர்.
இந்த அவல நிலை பல வாரங்களாக நீடித்தும், எவ்வித பராமரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை. கொழுமம் ரோடு சந்திப்பு, கொல்லம்பட்டறை உள்ளிட்ட இடங்களிலும், ரோடு படுமோசமாக சேதமடைந்தள்ளது.
விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் முன், தேசிய நெடுஞ்சாலையில் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழை நீர் வடிகால்களை துார்வாரி புதுப்பிக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

