ADDED : அக் 14, 2025 11:31 PM

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, கணிதத்துறை சார்பில், 'தெளிவற்ற நுண்ணறிவு மாதிரியும், சிறப்பான பயன்பாடும்' எனும் தலைப்பில், சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர் சரவணன் வரவேற்றார். கொழும்பு பல்கலை சேர்ந்த பேராசிரியர்கள் சஞ்சீவ்பெரேரா, பிரபாத்லியானகே மற்றும் திருச்சி, தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தை சார்ந்த பேராசிரியர் லட்சுமண கோமதிநாயகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆய்வு அறிக்கைகள் கொண்ட புத்தகம் வெளியிடப்பட்டது. கொழும்பு பல்கலையுடன் - சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி கணிதத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கருத்தரங்கில், மாணவ, மாணவியர், 117 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர் ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார். பேராசிரியர் ராதாமணி கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்.

