/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிதன்யா வழக்கில் உரிய நீதி வணிகர்கள் சங்கம் வலியுறுத்தல்
/
ரிதன்யா வழக்கில் உரிய நீதி வணிகர்கள் சங்கம் வலியுறுத்தல்
ரிதன்யா வழக்கில் உரிய நீதி வணிகர்கள் சங்கம் வலியுறுத்தல்
ரிதன்யா வழக்கில் உரிய நீதி வணிகர்கள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2025 11:30 PM

அவிநாசி; வரதட்சனை கொடுமையால் திருமணமான இரண்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவிற்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் தொடர் உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அவிநாசியில் வரதட்சனை கொடுமையால், ரிதன்யா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து. அவிநாசி அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள், அனைத்து வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் மற்றும் அறக்கட்டளையினர் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டம், ஆனந்தாஸ் ஓட்டல் மேல்மாடியில் நேற்று நடந்தது.
இதில், முத்துக்குமரன் (வியாபாரிகள் சங்க பேரமைப்பு), கார்த்திகேயன் (அனைத்து வணிகர் சங்கம்), சீதாராம் செந்தில்குமார் (ஹோட்டல் சங்கம்), சுந்தரவடிவேல் (மளிகை வியாபாரிகள் சங்கம்), சம்பத்குமார் (கிராமிய மக்கள் இயக்கம்), சதீஷ்குமார் (களம் அறக்கட்டளை), ரவிக்குமார் ( நல்லது நண்பர்கள் அறக்கட்டளை) உட்பட பலர் பேசினர். ரிதன்யாவின் படத்துக்கு தீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோருக்கு ஜாமின் வழங்கக் கூடாது. மூவருக்கும் உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வழக்கில் உரிய நீதி கிடைக்காவிட்டால், தொடர் உண்ணாவிரதம், கடையடைப்பு நடத்துவது, வரும், 7ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, புதிய பஸ் ஸ்டாண்ட் முன், மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.