/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளம்பெண் தற்கொலை மாமியாரும் அதிரடியாக கைது
/
இளம்பெண் தற்கொலை மாமியாரும் அதிரடியாக கைது
ADDED : ஜூலை 05, 2025 02:35 AM

அவிநாசி:அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரும் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி - கைகாட்டிப்புதுாரை சேர்ந்த அண்ணாதுரை மகள் ரிதன்யா, 27, திருமணமான இரண்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் ரிதன்யாவின், 'ஆடியோ' வாக்குமூலத்தை தொடர்ந்து, கணவர் கவின்குமார், 28, மாமனார் ஈஸ்வரமூர்த்தி, 53, மாமியார் சித்ராதேவி, 47, ஆகியோர் மீது தற்கொலைக்கு துாண்டுதல், துன்புறுத்துதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சேவூர் போலீசார், மூவரையும் கைது செய்தனர்.
கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தை குறிப்பிட்டு, சித்ராதேவியை நிபந்தனையின்படி, போலீசார் விடுவித்தனர். ஆனால், சித்ராதேவியை தப்ப விட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து சித்ராதேவியை சேவூர் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.