/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் வரி செலுத்த நகராட்சி அறிவுறுத்தல்
/
மக்கள் வரி செலுத்த நகராட்சி அறிவுறுத்தல்
ADDED : ஜன 26, 2024 11:32 PM
உடுமலை: உடுமலை நகராட்சிக்கு வரிகள் செலுத்தாவிட்டால் குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.
உடுமலை நகராட்சிக்கு, பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகிய வரி இனங்களை நிலுவையின்றி உடனடியாக நகராட்சி வசூல் மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
தவறினால் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாளச்சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம் செயல்படுகிறது. https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், வரி இனங்களை செலுத்தலாம், என, உடுமலை நகராட்சி கமிஷனர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் தெரிவித்துள்ளார்.

