/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் ஆறு துார்வாரும் பணி துவங்கியது
/
நொய்யல் ஆறு துார்வாரும் பணி துவங்கியது
ADDED : செப் 29, 2025 12:31 AM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியைப் பொறுத்தவரை நகரின் மையப்பகுதியை நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. இதில், சேனாப் பள்ளம், ஜம்மனைப் பள்ளம், சங்கிலிப்பள்ளம் ஓடை, சபரி ஓடை, மந்திரி வாய்க்கால் ஆகிய ஓடைகள் சென்று கலக்கின்றன.
இந்த ஓடைகளும் நொய்யல் ஆறும் பெருமளவு மண் மேடுகள், குப்பை கழிவுகள், செடி கொடி போன்ற புதர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகிறது. மழைக்காலங்களில் இவற்றில் மழை நீர் செல்வதுதடைபடுவதும், தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்து விடுவதும் சகஜமாக உள்ளது.
இதை தவிர்க்கும் வகையில், இவற்றை துார் வாரி மழை நீர் தேங்காமல் கடந்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என சுட்டிக் காட்டி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து அப்பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் அமித், நீர் வழிப்பாதைகளை துார் வாரி செப்பனிட உத்தரவிட்டார். அவ்வகையில், நொய்யல் ஆற்றை துார் வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

