/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆறு முதல் 8ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம்
/
ஆறு முதல் 8ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம்
ஆறு முதல் 8ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம்
ஆறு முதல் 8ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம்
ADDED : ஜூன் 19, 2025 07:42 AM
உடுமலை : அரசு பள்ளி 6,7,8 வகுப்பு ஆசிரியர்களுக்கு, திறன் பயிற்சி அளிப்பதற்கு கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் நடைமுறையில் பாடம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும் மூன்று பருவங்களுக்கும் எண்ணும் எழுத்தும் நடைமுறையில் பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். மேலும், அவர்களின் கற்றல் திறன்களை அளவிடும் வகையில் ஆன்லைனில் தேர்வுகளும் நடக்கிறது.
இந்த நடைமுறை அடுத்தகட்டமாக, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் செயல்படுத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, அரசு நடுநிலை முதல் மேல்நிலை வரை உள்ள பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, திறன் பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளிலும், ஆசிரியர்கள் இப்பயிற்சி பெறுவதற்கு தயாராக இருப்பதற்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.