/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பலகார தயாரிப்பாளருக்கு அதிகாரிகள் அறிவுரை
/
பலகார தயாரிப்பாளருக்கு அதிகாரிகள் அறிவுரை
ADDED : அக் 14, 2025 09:11 PM
உடுமலை; திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உணவு நிறுவனத்தினருக்கான ஆலோசனை கூட்டம், நடந்தது.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் பேசியதாவது:
உணவு வணிகர்கள், உணவு பொருள் தயாரிப்பு அளவை பொறுத்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்று பெறவேண்டும்.
உணவு தயாரிப்புக்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தரச்சான்று பெற்ற குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் தொடர் ஆய்வு நடத்துவர்; விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தயாரிப்பாளர், விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உணவு சம்பந்தமான புகார்களை, 94440 42322 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம். கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

