/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பக்தர்களிடம் பொறுமை :போலீசாருக்கு அறிவுரை
/
பக்தர்களிடம் பொறுமை :போலீசாருக்கு அறிவுரை
ADDED : பிப் 02, 2024 12:36 AM

திருப்பூர்;அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில், ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எஸ்.பி., அபிஷேக் குப்தா தலைமையில் நேற்று கோவில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜான்சன், கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார் மற்றும் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், பக்தர்களை ஒழுங்குபடுத்துவது, போக்குவரத்து சரி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 'டியூட்டி' முடியும் வரை பணியில் இருக்க வேண்டும் என்று எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.

