/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டின் மத்தியில் மின் கம்பங்கள் அகற்ற மக்கள் வலியுறுத்தல்
/
ரோட்டின் மத்தியில் மின் கம்பங்கள் அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ரோட்டின் மத்தியில் மின் கம்பங்கள் அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ரோட்டின் மத்தியில் மின் கம்பங்கள் அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 12, 2025 10:04 PM

உடுமலை; உடுமலையில், ரோட்டின் மத்தியிலுள்ள மின் கம்பத்தால், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
உடுமலை நகராட்சி, 13வது வார்டு, யு.கே.சி., நகரில், 13 வீதிகளில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நகருக்கு செல்லும் பிரதான வழித்தடத்தில், ரோட்டின் மத்தியில் வரிசையாக மின் கம்பங்கள் அமைந்துள்ளன.
இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதோடு, இரவு நேரங்களில் மின் கம்பங்களில் மோதி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லுாரி வாகனங்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், கன ரக வாகனங்கள் செல்ல முடியாமலும், திரும்ப முடியாமலும் கடும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, ரோட்டின் மத்தியிலுள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க, நகராட்சி மற்றும் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.