/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆர்டர்களை ஈர்க்க புதிய வியூகம் வகுக்க திட்டம்!
/
ஆர்டர்களை ஈர்க்க புதிய வியூகம் வகுக்க திட்டம்!
ADDED : மே 15, 2025 11:57 PM

திருப்பூர் : இந்தியாவின், 'டாப் 10' நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்து வருவதால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் புதிய ஆர்டர்களை ஈர்க்க முயற்சியை துவக்கியுள்ளனர்.
நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த, 2022-23ம் நிதியாண்டில், ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 985 கோடி ரூபாயாக இருந்தது; 2023-24ல், ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 304 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த நிதியாண்டில், ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 425 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதிகபட்ச ஏற்றுமதி நடக்கும், 'டாப் 10' நாடுகளுக்கு கடந்த 2023-24ம் ஆண்டில், 91 ஆயிரத்து, 374 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில், ஒரு லட்சத்து, 1 ஆயிரத்து, 562 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது; இது, 10 சதவீதம் அதிகம்.
அதிகபட்சமாக, அமெரிக்காவுக்கு மட்டும், 45 ஆயிரத்து, 174 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. பிரிட்டன் - 12 ஆயிரத்து, 134 கோடி; ஐக்கிய அரபு நாடுகள் - 10 ஆயிரத்து, 233 கோடி, ஜெர்மனி - 7,225 கோடி; நெதர்லாந்து - 6,812 கோடி, ஸ்பெயின் - 5,820 கோடி; பிரான்ஸ் - 5,123 கோடி, இத்தாலி - 3,026 கோடி- சவூதி அரேபியா - 3,050 கோடி, ஆஸ்திரேலியா - 2,965 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், நெதர்லாந்துக்கான ஏற்றுமதி, 27 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்பெயின் ஏற்றுமதி, 14 சதவீதமும், அமெரிக்க ஏற்றுமதி, 13 சதவீதமும் உயர்ந்துள்ளது. பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியாவுக்கு மட்டும், முந்தைய ஆண்டுகளை காட்டிலும், 5 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது.
'டாப் -10' நாடுகள் மற்றும் வரியில்லா வர்த்தக ஒப்பந்த நாடுகளுடன், வர்த்தகம் அதிகரித்து
-- தொடர்ச்சி 3ம் பக்கம்