/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு அலுவலகத்தை அழகுபடுத்தும் செடிகள்
/
அரசு அலுவலகத்தை அழகுபடுத்தும் செடிகள்
ADDED : ஜன 28, 2024 12:14 AM

பல்லடம்;பல்லடம் பி.டி.ஓ., அலுவலகத்தை அழகுப்படுத்தும் விதமாக, அரசு அலுவலர்கள் ஊழியர்கள் அனைவரும் இணைந்து, அலங்கார செடிகள் வைத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர் ஒருவர், சமீபத்தில், பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெறும் நாளன்று, அலுவலகத்தில் பணியாற்றியதன் நினைவாக இரண்டு அலங்கார செடிகள் கொண்ட பூந்தொட்டிகளை வழங்கினார். அதில் அவரது பெயர் எழுதப்பட்டது. இதை தொடர்ந்து, இதேபோல் அலுவலர்கள் அனைவரும் இணைந்து அலங்கார செடிகளை அலுவலகம் முழுவதும் வைக்க திட்டமிட்டோம்.
இதன்படி, அனைவரின் பங்களிப்புடன் அலுவலக வளாகம் முழுவதும் அலங்கார செடிகள் வைக்கப்பட்டு, அவற்றை வழங்கிய அலுவலர்கள், ஊழியர்கள் ஒவ்வொருவரின் பெயரும் எழுதப்பட்டுள்ளன. இவற்றால், அலுவலக வளாகம் பசுமையுடன் அழகுற காட்சியளிக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.