/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.எம்.எஸ்., மாநில மாநாடு மதுரையில் 2 நாள் நடக்கிறது
/
பி.எம்.எஸ்., மாநில மாநாடு மதுரையில் 2 நாள் நடக்கிறது
பி.எம்.எஸ்., மாநில மாநாடு மதுரையில் 2 நாள் நடக்கிறது
பி.எம்.எஸ்., மாநில மாநாடு மதுரையில் 2 நாள் நடக்கிறது
ADDED : ஜன 28, 2024 12:01 AM
திருப்பூர்;பாரதிய மஸ்துார் சங்கத்தின், 14வது மாநில மாநாடு, பிப்., 3ம் தேதி, திருப்பரங்குன்றம் நெல்மண்டி மஹாலில் நடக்கிறது. மாலை, 3:45 மணிக்கு திருநகர் பஸ் ஸ்டாண்ட் முதல் மாநாட்டு அரங்கம் வரை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. மாநாட்டின், 2ம் நாள் நிகழ்ச்சியா, பிரதிநிதிகள் மாநாடு ஒக்கலிகர் திருமண மண்டபத்தில், 4ம் தேதி காலை 9:15 மணிக்கு நடக்கிறது.
மதுரையில் நடைபெறும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட அமைப்பு சார்பில் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். செயலாளர் மாதவன், பொருளாளர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் சந்தான கிருஷ்ணன், சிதம்பரசாமி உள்ளிட்டோர் பேசினர். மதுரை மாநாட்டில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து, 700 பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.