/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்களில் பவுர்ணமி பூஜை பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம்
/
கோவில்களில் பவுர்ணமி பூஜை பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம்
கோவில்களில் பவுர்ணமி பூஜை பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம்
கோவில்களில் பவுர்ணமி பூஜை பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம்
ADDED : ஜன 26, 2024 11:34 PM

உடுமலை: தைப்பூசத்தையொட்டி உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், கும்மியடித்து, தேர்க்கோலமிட்டு, கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், தைப்பூசம் மற்றும் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. கண்டியம்மன் மற்றும் முருகன் சன்னதியில், 16 வகையான அபிேஷகங்கள் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
இதே போல், உடுமலை கொங்கலக்குறிச்சி காளியம்மன் கோவில் அருகில், தைப்பூசத்தையொட்டி, பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் நடந்தது. தேர்க்கோலமிட்டு, மாவிளக்கு வைத்து, பவுர்ணமி இரவு முழுவதும் சிறப்பு பூஜை நடந்தது.