/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறி காடா துணிகள் மதிப்புக்கூட்டு பொருளாகும்
/
விசைத்தறி காடா துணிகள் மதிப்புக்கூட்டு பொருளாகும்
ADDED : ஜூன் 19, 2025 05:02 AM

பல்லடம : பல்லடம் அருகே உருவாகி வரும் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் விரைவில் செயல்பாட்டை துவக்குகிறது. இதன் மூலம், விசைத்தறி காடா துணிகள் மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றப்பட்டு விற்பனைக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி காடா உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. இங்கு உற்பத்தியாகும் காடா துணிகள், வட மாநிலங்களில் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்பட்டு விற்பனைக்கு செல்கின்றன. துணிகளை இங்கேயே மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவதற்காக, பொதுப்பயன்பாட்டு மையம் அமைக்க, கடந்த 2018ல் திட்டமிடப்பட்டது. இதற்காக கேத்தனுார் கிராமத்தில், 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கின.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் விசைத்தறியாளர்களின் பங்களிப்பு என, 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொது பயன்பாட்டு மையம் அமைக்கும் பணி துவங்கியது. கட்டட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
---
கேத்தனுாரில் உருவாகியுள்ள விசைத்தறி பொது பயன்பாட்டு மையம்.