/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
/
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 10, 2025 09:35 PM

உடுமலை; உடுமலையில், அரசு போக்குவரத்து கழக டிரைவரை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரையில், அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர், தணிக்கையாளர் மற்றும் பஸ் ஸ்டாண்ட் பொறுப்பாளர்கள் இணைந்து, தாராபுரம் கிளையிலிருந்து மதுரைக்கு அரசு பஸ் ஓட்டிச்சென்ற டிரைவர் கணேசை தாக்கி காயப்படுத்தினர்.
இதனை கண்டித்து, நேற்று உடுமலை அரசு போக்குவரத்து கழக கிளை முன், தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.டி.பி., - நேதாஜி சங்கம், ஐ.என்.டி.யு.சி., - ஏ.ஐ.டி.யு.சி., சீருடை பணியாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எல்.பி.எப்., நிர்வாகி சோமசுந்தரம் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., நிர்வாகி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், உதவி பொதுமேலாளர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யவும், மான நஷ்ட இழப்பீடு, ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.