/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 'சைக்கோ' வாலிபரால் பரபரப்பு
/
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 'சைக்கோ' வாலிபரால் பரபரப்பு
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 'சைக்கோ' வாலிபரால் பரபரப்பு
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 'சைக்கோ' வாலிபரால் பரபரப்பு
ADDED : ஜன 27, 2024 01:38 AM

திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று பகல் 12:00 மணிக்கு, நீண்ட நேரமாக முதல் பிளாட்பாரம் இருக்கையில், 30 வயது, வட மாநில நபர் அமர்ந்திருந்தார்.
தன் மொபைல் போனில் நீண்ட நேரம் ஆவேசமாகப் பேசியபடி இருந்தார். பின், அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து தன் தலையில் ரத்தம் வரும் வரை பலமுறை அடித்துக் கொண்டார்.
குழந்தை படுகாயம்
தொடர்ந்து, நடை மேம்பாலம் கீழ், தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல ஒரு தம்பதி, தங்கள் இரு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தனர். அங்கு சென்ற அந்த நபர், யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு குழந்தையைப் பறித்து, அதன் கால்களைப் பற்றி, தரையில் அடித்தார். இதில் அச்சிறுமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
அந்த குழந்தையை போட்டு விட்டு, ஸ்டேஷனில் அங்கும் இங்கும் ஓடினார். படுகாயம் அடைந்த குழந்தை, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தற்கொலை முயற்சி
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணியர் சிலர் அந்த நபரை விரட்டினர். நடைமேம்பாலம் மீது ஏறிச்சென்ற அவர், அங்கிருந்த தடுப்பின் மீது ஏறி, உயர் மின் அழுத்த கம்பி மீது, தற்கொலை செய்யும் எண்ணத்தில் குதித்தார்.
மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த அவர், ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். தகவல் அறிந்து ரயில்வே போலீசார், அந்த நபரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து விசாரிக்கின்றனர்.

