/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுப்பையா பள்ளி மாணவர்கள் மறுசுழற்சி விழிப்புணர்வு
/
சுப்பையா பள்ளி மாணவர்கள் மறுசுழற்சி விழிப்புணர்வு
ADDED : ஜூன் 13, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் சுப்பையா சென்ட்ரல் (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில், தாளாளர் சுகுமாரன் முன்முயற்சியால், பள்ளி மாணவர்கள் கொண்டுவந்த மின்னணுப் பொருட்களை, பள்ளி இன்ட்ரேக்ட் கிளப் பொறுப்பாளர் பத்மாவதி பெற்றுக்கொண்டார்.
இவை மாசுக்கட்டுப்பாடு வாரிய அங்கீகாரத்துடன் கூடிய தனியார் மறுசுழற்சி நிறுவனத்துக்கு, மின்கழிவு மறுசுழற்சி செய்வதற்காக வழங்கப்பட்டது.
மின்னணு கழிவுகளின் பாதிப்பில் இருந்து புவியைக் காக்க மின் கழிவு மறுசுழற்சியின் அவசியம் குறித்து பள்ளி முதல்வர் ஆரோக்கிய ஜெரால்டு மாணவர்கள் மத்தியில் விளக்கினார்.