sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடியரசு தின விழா; பள்ளி, கல்லுாரிகளில் கோலாகலம்

/

குடியரசு தின விழா; பள்ளி, கல்லுாரிகளில் கோலாகலம்

குடியரசு தின விழா; பள்ளி, கல்லுாரிகளில் கோலாகலம்

குடியரசு தின விழா; பள்ளி, கல்லுாரிகளில் கோலாகலம்


ADDED : ஜன 26, 2024 11:36 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி பள்ளி, கல்லுாரிகளில், நாட்டின் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. உடுமலை பகுதியிலும் இவ்விழா கோலாகலமாக நடந்தது.

* சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த, குடியரசு தின விழாவில் தலைமையாசிரியர் இன்பகனி தலைமை வகித்தார். மாணவர்கள் இந்திரா காந்தி, நேரு, காமராஜ் போன்ற தலைவர்கள் போல வேடமணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மை குழுவினர், ஊராட்சி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

*ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி முதல்வர் மாலா, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக்கொடியை ஏற்றினார்.

மாணவர்கள் தேசத்தலைவர்களாக உடையணிந்து பேசினர். ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனத்தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தனர்.

*கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி சாரண சாரணியர் அணிவகுப்பு மரியாதையுடன் கொடி ஏற்றப்பட்டது. மாணவர்கள் தேசபக்தி பாடல்கள், கவிதை, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

*குருவப்பநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமையாசிரியர் சந்திரசேகர் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ரங்கராஜன் வரவேற்றார். ஊராட்சித்தலைவர் தமிழ்செல்வி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழுவினர், பொதுமக்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, எழுத்து, ஓவியப்போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

* சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வட்டார கல்வி அலுவலர் அருள்முருகன் கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் சரவணன், ஆசிரியர் கீதாஞ்சலி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடந்தது.

தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. கலைநிகழ்ச்சிகளை, பார்வையாளர்களும் பொதுமக்களும் கண்டு மகிழ்ந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

* ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், குழந்தைகளின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் யோகா பயிற்சிகளும் அரங்கேறியது. ஆசிரியர் கண்ணபிரான் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். தலைமையாசிரியர் சாவித்ரி தலைமை வகித்தார்.

* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். பள்ளி இலக்கிய மன்ற தலைவர் லத்திகா குடியரசு தினவிழாவின் சிறப்பு குறித்து பேசினார். மாணவர்கள் தேசபக்தி பாடல்களை பாடினர். சுற்றுசூழல் விழிப்புணர்வு குறித்து மாணவர்களின் நாடகம் நடந்தது.

* உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரி முதல்வர் லட்சுமி கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை நடத்தினர்.

மாணவியர் தேசிய ஒருமைப்பாட்டு பாடல்கள் பாடினர். கல்லுாரி மாணவப்பேரவைத் தலைவர் ரோஷினி தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்க, மாணவியர் பின்பற்றினர். தமிழ்த்துறை தலைவர் வசுமதி குடியரசு தினவிழா குறித்து பேசினார்.

மாணவர் பேரவை செயலாளர் சிவரஞ்சனி கீதாஞ்சலியிலிருந்து செய்திகளை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி பேரவைத்தலைவர் அறம் செய்திருந்தார்.

* உடுமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில், நேதாஜி மைதானத்தில் நடந்த விழாவில், சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சுபேதார் நடராஜ் தலைமையில் அணிவகுப்பு மரியாதை நடந்தது. சுபேதார் மேஜர் கோவிந்தராஜூலு கொடி ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில், சங்கத்தினர் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* உடுமலை இரண்டாம் கிளை நுாலகத்தில் நடந்த விழாவில், நுாலகர் மகேந்திரன் தலைமை வகித்தார். மகளிர் நுாலக வாசகர் வட்டதலைவர் விஜயலட்சுமி கொடி ஏற்றினார். நுாலகர் பிரமோத், ஓய்வுபெற்ற நுாலகர் கணேசன், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

* உடுமலை லெப்டினெட் சுபாஷ்ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில், அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் கொடி ஏற்றினார். உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

* உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 75 வந்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முதுகலை கணித ஆசிரியர் வசந்தா தேசியக்கொடி ஏற்றினார்.

தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதுகலை ஆங்கில ஆசிரியர் யமுனா மற்றும் மாணவியர் குடியரசு தின விழா சிறப்புகளை எடுத்துரைத்தனர். சாரணர் இயக்கம் மற்றும் பசுமைப்படை சார்பில் மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போட்டிகளில் பரிசு பெற்ற மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் தேசிய மாணவர் படையின் முதன்மை அலுவலர் நர்மதா செய்திருந்தார்.

* உடுமலை நகராட்சி அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், வட்டார போக்குவரத்து அலுவலகம், நீதிமன்றம், தாலுகா அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் குடியரசு தின நேற்று நடந்தது. இதில், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us