ADDED : ஜன 26, 2024 11:56 PM

திருப்பூர்: திருப்பூர் வட்டாரத்தில் பல இடங்களில், குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று குடியரசு தினம் முன்னிட்டு தேசிய கொடியேற்றப்பட்டது. கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
மேயர் தினேஷ்குமார் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஊர்வலமாகச் சென்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
l திருப்பூர், கோல்டன் நகர், மாநகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் தேவகி, தலைமை வகித்தார். ஆசிரியை பத்மாவதி, முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள், தேச விடுதலை குறித்து பேசினர்.
l கருணாகரபுரம், மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு, தலைமையாசிரியர் நாகலட்சுமி, தலைமை வகித்தார்.
l திருப்பூர் மாநகர மாவட்ட காங்., கமிட்டி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.
l திருப்பூர், மேட்டுப்பாளையம் வெங்கடேசபுரம், காமராஜர் தேசிய மன்றத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. மன்ற தலைவர் குமாரசாமி, தேசிய கொடியேற்றினர். 20வது வார்டு உறுப்பினர் சுகுமார், இனிப்பு வழங்கினார். மன்ற செயலர் சிவதாசன், நன்றி கூறினார்.
l பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் ஊர் மக்கள் சார்பில், ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் முன், கொடி மரத்தில், ஊர் செட்டிமை செல்வராஜ், கொடியேற்றினார். சவுடேஸ்வரி அம்மன் இளைஞர் சேவா சங்க அறக்கட்டளை சார்பில், சங்க தலைவர் பன்னீர்செல்வம், எஸ்.வி., காலனியில், காந்திஜி தேசிய நற்பணி இயக்கம் சார்பில், சுப்ரமணியன் ஆகியோர் கொடியேற்றினார்.
l திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டுக்கு உட்பட்ட கே.வி.ஆர்., நகர், செல்லம் நகர், பாரப்பாளையம் மாநகராட்சி பள்ளிகளில், வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி கொடியேற்றினார். 100 சதவீத வருகை புரிந்த மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
l அவிநாசி ரோட்டில் உள்ள பிரைம் அபார்ட்மென்ட்ஸ் வளாகத்தில் உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் குடியரசு தின விழா நடந்தது. கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
l திருப்பூர் பிரியங்கா நகரில் உள்ள அல்நுார் டிரஸ்ட் சேவைக்குழு சார்பில், அலுவலக வளாகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. டிரஸ்ட் தலைவர் ஹாஜி சிராஜூதீன் தேசிய கொடியேற்றினார். செயலாளர் நசீருதீன் வரவேற்றார். மதகுரு கலீமுல்லாஹ் சிராஜி சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் சம்சுதீன் நன்றி கூறினார்.
l அவிநாசி அருகே தெக்கலுாரில் உள்ள கே.பி.ஆர்., மில் நிறுவனத்தின் குவாண்டம் நிட்ஸ் அலகு - 3ல், குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவிநாசி போலீஸ் எஸ்.ஐ., லோகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். கே.பி.ஆர்., குழுமத்தின் மனித வள மேம்பாட்டு பிரிவு மேலாளர் தங்கவேல், வீரகுமார் மற்றும் கே.பி.ஆர். பெண் பணியாளர்கள் கல்வி பிரிவின் முதல்வர் சரவணபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
l அவிநாசி பேரூராட்சியில், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தலைமை எழுத்தர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். துாய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெறும் ரங்கனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர், கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், பரஹகத்துல்லா, கார்த்திகேயன், கருணாம்பாள், தங்கவேல் பங்கேற்றனர்.
l குளத்துப்புதுார் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சியாமளா கவுரி, தேசிய கொடி ஏற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மன்னா புட்ஸ் உரிமையாளர் தர்மதுரை சார்பில், ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கு, இனிப்பு மற்றும் பரிசு வழங்கப்பட்டது. கவுன்சிலர் சாந்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணேசன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் குணசேகர் பங்கேற்றனர். ஆசிரியர் மோகன சுந்தரி நன்றி கூறினார்.

