/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜன 23, 2024 11:52 PM
உடுமலை;உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உடுமலை சட்டப்பணிகள் குழு மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நடந்தது.
உடுமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் மீனாட்சி, வக்கீல்கள் செந்தில்குமார், தம்பி பிரபாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும், அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது, இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்கக்கூடாது, இன்சூரன்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

