/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி விளையாட்டு விழா: மாணவர்களுக்கு பரிசு
/
பள்ளி விளையாட்டு விழா: மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 09, 2024 10:53 PM

உடுமலை:'அமாரவதி சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன், விழாவை துவக்கி வைத்தார். பள்ளித்தாளாளர் அருட்செல்வன், பள்ளி முதல்வர் செல்வநாயகி முன்னிலை வகித்தனர்.
மழலையர் பிரிவு முதல், மேல்நிலை வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்று, அணிவகுப்பு மரியாதை செய்தனர். தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடந்தன.
கடந்த மூன்று கல்வியாண்டுகளில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

