/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் பூங்கா மக்களுக்கு அர்ப்பணிப்பு
/
அறிவியல் பூங்கா மக்களுக்கு அர்ப்பணிப்பு
ADDED : ஜன 27, 2024 11:41 PM

திருப்பூர்:சிங்காரிமேளம், காவடி ஆட்டம், பரதநாட்டியம் என, கலக்கலான கலை நிகழ்ச்சிகளுடன், மாநகராட்சி அறிவியல் பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, இன்று நடக்கிறது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினரின் ஒன்பது ஆண்டுகால சமுதாய நோக்குடன் கூடிய உழைப்பின் அடையாளமாக, திருப்பூர் மாநகராட்சி அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இடுவாய், சின்னக்காளிபாளையத்தில் உள்ள, மாநகராட்சியின், 12 ஏக்கர் நிலத்தில், 4.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைந்துள்ளது. தமிழக முதல்வர், பூங்காவை திறந்து வைத்துள்ள நிலையில், இன்று முதல், மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
அமைச்சர்கள், கலெக்டர், மேயர், மாநகராட்சி கமிஷனர், எம்.எல்.ஏ.,க்கள், முன்னிலையில், அறிவியல் பூங்கா அர்ப்பணிப்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
'பியூஷன்' சிங்காரிமேளம், காவடியாட்டம், பறை இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், 'புட்லுாஸ்' குழுவினரின் நடனம், மேஜிக் ேஷா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.