/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுநீர் தேக்கம்; நோய் பரவும் அபாயம்
/
கழிவுநீர் தேக்கம்; நோய் பரவும் அபாயம்
ADDED : அக் 14, 2025 11:47 PM

அவிநாசி; அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சி கமிட்டியார் காலனி, எம்.எஸ்.வி., கார்டனில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
குடியிருப்புகளுக்கு முறையான சாக்கடை கழிவுநீர் வடிகால் இல்லாததால் வீட்டின் முன்புறம் உறிஞ்சுகுழி அமைத்து கழிவு நீரை வெளியேற்றி வந்தனர். கடந்த 2024-- 25ம் ஆண்டுக்கான ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் தரைமட்ட கழிவுநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
ஆனால் போதிய அளவிலான கழிவு நீர் தேக்க தொட்டி அமைக்காததாலும், வடிகால் வழியாக செல்ல வழி ஏற்படுத்தாததாலும் குடியிருப்பு பகுதிகளிலும் தெருக்களிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. நிலத்தடி நீரில் கழிவு நீர் உறிஞ்சப்பட்டு ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் தண்ணீரில் கடும் துர்நாற்றமும் நுரையும் கலந்து வருகிறது.
கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். உடனடியாக கழிவு நீரை வெளியேற்ற முறையான வடிகால் அமைக்க வேண்டும்.

