/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ருத்ராட்ச சிவலிங்கத்துடன் சிவனடியார் நடைபயணம்
/
ருத்ராட்ச சிவலிங்கத்துடன் சிவனடியார் நடைபயணம்
ADDED : பிப் 02, 2024 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடக்கிறது.
இதில் பங்கேற்க சுற்று வட்டார கிராமங்கள், அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அவிநாசிக்கு படையெடுத்து வருகின்றனர். பல ஊர்களில் இருந்து சிவனடியார்கள் அவிநாசிக்கு வந்தனர்.
இச்சூழலில், பவானி கூடுதுறையை சேர்ந்த, 20 சிவனடியார்கள் 70 கி.மீ., பாதயாத்திரையாக அவிநாசிக்கு நேற்று காலை புறப்பட்டனர். அவர்கள் ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை தலையில் சுமந்த படி மாலை அவிநாசி வந்தடைந்தனர். அவர்களை பக்தர்கள் வரவேற்றனர்.

