/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள்
/
திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள்
ADDED : அக் 14, 2025 11:55 PM
திருப்பூர்; தீபாவளி பண்டிகை நெரிசலை குறைக்கும் வகையில், பெங்களூரு - கொல்லம் இடையே இரு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும், 16ம் தேதி மதியம், 3:00 க்கு பெங்களூரில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06561) மறுநாள் காலை 6:20 க்கு கொல்லம் சென்று சேரும்.
இந்த ரயில், திருப்பூருக்கு, இரவு, 9:33க்கு வரும்; கோவை ஜங்ஷன் செல்லாது; போத்தனுார் வழியாக பயணிக்கும். கொல்லத்தில் இருந்து பெங்களூருவுக்கு, 17 ம் தேதி காலை 10:45 க்கு சிறப்பு ரயில் (எண்:06562) புறப்படும்; மறு நாள் அதிகாலை, 3:30க்கு பெங்களூரு சென்று சேரும்; திருப்பூரை, இரவு 7:18க்கு கடக்கும்.
வரும், 21 ம் தேதி மற்றொரு பெங்களூரு - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:06567) இயங்கும். 22 ம் தேதி கொல்லம் - பெங்களூரு சிறப்புரயில் (எண்:06568) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

