/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கிய பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரையின்றி தவிப்பு
/
முக்கிய பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரையின்றி தவிப்பு
ADDED : மே 17, 2025 04:19 AM
உடுமலை : உடுமலை எஸ்.என்.ஆர். லே - அவுட் மற்றும் டி.வி.,பட்டினம் வரை உள்ள, குடியிருப்புகளில் உள்ள மக்கள், மேம்பாலம் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர். அப்பகுதியில்தான் உடுமலை ஒன்றிய அலுவலகமும் உள்ளது.
தற்போது அலுவலகம் புதிதாக கட்டும் பணிகள் நடக்கிறது. இருப்பினும், அந்த பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த பிரதான பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை. இதனால், பயணியர் மரநிழலிலும், அருகிலுள்ள கடைகளின் வாசல்களிலும் காத்திருக்கின்றனர். மழை, வெயில் காலங்களில், பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க முடியாமல் தவிக்கின்றனர்.
பயணியர் அதிக எண்ணிக்கையில் இருப்பினும், இதுவரை அடிப்படையான நிழற்கூரை வசதி இல்லாததால் வேதனைக்குள்ளாகின்றனர். எனவே அங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.