/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கட்டணத்தால் நிதிச்சுமை கோவில் பூசாரிகள் குற்றச்சாட்டு
/
மின் கட்டணத்தால் நிதிச்சுமை கோவில் பூசாரிகள் குற்றச்சாட்டு
மின் கட்டணத்தால் நிதிச்சுமை கோவில் பூசாரிகள் குற்றச்சாட்டு
மின் கட்டணத்தால் நிதிச்சுமை கோவில் பூசாரிகள் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 07, 2025 12:36 AM
பல்லடம், ; தமிழக முதல்வருக்கு, கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் வாசு அனுப்பிய மனு:
பெரும்பாலான கோவில்களில், வழிபாட்டுத்தலங்களுக்கு உரிய மின் கட்டணங்கள் வசூல் செய்யப்படாமல், வணிக ரீதியான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், நிதிச்சுமை ஏற்படுகிறது.
மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் என்றால், அதற்கென ஒரு கட்டணமும், கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்கள் என்றால், வேறு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
கோவில் விழாக்கள், பண்டிகைகளின் போது, கோவில்களில் அதிகப்படியான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது போன்ற வணிக ரீதியான மின்கட்டணங்கள் வசூலிக்கப்படும் போது, கோவில்களின் வருவாய் மிகவும் பாதிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மின்வாரியத்துக்கு வலியுறுத்த வேண்டும் என, பலமுறை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், வணிக ரீதியான கட்டணமே இன்று வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
பெரும்பாலான கோவில்களில், வருவாயின் பெரும் பங்கினை மின்கட்டணத்துக்காகவே செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. சிறிய கோவில்கள் இதனால் கடும் நிதிச் சுமைக்கு ஆளாகின்றன. எனவே, கோவில்களுக்கு வழிபாட்டுத்தலங்களுக்கான மின் கட்டணமாக மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.