/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அக்னி நட்சத்திரம் விடைபெற்றது தென்மேற்கு பருவமழை துவங்கியது
/
அக்னி நட்சத்திரம் விடைபெற்றது தென்மேற்கு பருவமழை துவங்கியது
அக்னி நட்சத்திரம் விடைபெற்றது தென்மேற்கு பருவமழை துவங்கியது
அக்னி நட்சத்திரம் விடைபெற்றது தென்மேற்கு பருவமழை துவங்கியது
ADDED : மே 26, 2025 11:48 PM

திருப்பூர், ; அக்னி நட்சத்திரத்தை வழி அனுப்பி வைக்கும் விதமாக, கடந்த சில நாட்களாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும், பரவலாக மழை பெய்து வருகிறது.
கோடை பருவம் முடியும் முன்னதாகவே, கேரளாவில், தென்மேற்கு பருவம் துவங்கியதன் அடையாளமாக, கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கோவையில் ஏற்பட்ட நொய்யல் வெள்ளப்பெருக்கு, நேற்று இரவு திருப்பூரை எட்டிவிட்டது.
கோடை வெப்பத்தை எப்படி தணிக்கலாம் என, கத்திரி துவங்கியதும் கவலையில் இருந்த மக்களுக்கு, ஆறுதல் அளிப்பது போல், அவ்வப்போது மழை பெய்து குளிர்வித்தது. நாளையுடன், (28ம் தேதி) அக்னிநட்சத்திரம் நிறைவடைகிறது. சிவாலயங்களில், 4ம் தேதி முதல் நடந்து வந்த, தாராபிேஷகம் நாளை இரவு, அர்த்தஜாம பூஜையுடன் நிறைவு பெறுகிறது.
நேற்று முன்தினம் துவங்கி, நேற்று காலை, 8:00 மணி வரை, திருப்பூர் மாவட்டத்தில், 12.86 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. உடுமலை தாலுகா -19 மி.மீ., பல்லடம் தாலுகா -14 மி.மீ., மடத்துக்குளம் தாலுகா -12 மி.மீ., திருப்பூர் வடக்கு தாலுகா -10 மி.மீ.,. ஊத்துக்குளி -10 மி.மீ., அவிநாசி -10 மி.மீ., உப்பாறு அணை -18 மி.மீ., திருமூர்த்தி அணை - 48 மி.மீ.,-அமராவதி அணை -23 மி.மீ. என, மாவட்டத்தில் சராசரியாக, 12.86 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
பருவமழை துவங்கியுள்ளதால், தாலுகா அளவிலான பேரிடர் மேலாண்மை குழுவினர் தயாராக இருக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.