/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது: இன்ஸ்., மீதான நடவடிக்கை தேவையற்றது! பல்லடம் வட்டார அரசியல் கட்சியினர் கருத்து
/
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது: இன்ஸ்., மீதான நடவடிக்கை தேவையற்றது! பல்லடம் வட்டார அரசியல் கட்சியினர் கருத்து
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது: இன்ஸ்., மீதான நடவடிக்கை தேவையற்றது! பல்லடம் வட்டார அரசியல் கட்சியினர் கருத்து
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது: இன்ஸ்., மீதான நடவடிக்கை தேவையற்றது! பல்லடம் வட்டார அரசியல் கட்சியினர் கருத்து
ADDED : ஜன 11, 2024 11:14 PM
பல்லடம்;இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, பல்லடம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென, கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா 19. அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன், 19. இருவரும், பல்லடத்தில், கடந்த, 31ம் தேதி, திருமணம் செய்து கொண்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் உறவினர், பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் பேசி, வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 3ம் தேதி தந்தை மற்றும் உறவினர்கள், ஐஸ்வர்யாவை கொலை செய்து எரித்துவிட்டதாக, அவரின் கணவர் நவீன், வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை சரிவர கையாளவில்லை என்ற புகாரின் அடிப்படையில், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென, பல்லடம் வட்டார அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வினோத் வெங்கடேஷ் (பா.ஜ.,): இன்ஸ்பெக்டர் முருகையன் கோர்ட்டில் இருந்துள்ளதாகவும், பெற்றோர் மற்றும் பெண்ணின் விருப்பத்தின்பேரில்தான், போலீசார், பெண்ணை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை என்பது நியாயம்தானா? என்ற கேள்வி உள்ளது.
ராஜேந்திரகுமார் (தி.மு.க.,): 18 வயது தாண்டினாலே பெண்கள் சுயமாக முடிவு எடுக்க உரிமை உண்டு. விசாரணைக்கு பின்தான் பெற்றோருடன் பெண்ணை அனுப்பி உள்ளனர். பெண் மறுத்திருந்தால் தவறு என்று கூறலாம். பெண்களை மாலை, 5:00 மணிக்கு மேல் ஸ்டேஷனில் வைத்திருக்க முடியாது என்ற விதிமுறை உள்ளது. இதன்படி, போலீசார் சரியான விதிமுறைகளையே கடைப்பிடித்துள்ளனர். இதற்கிடையே, இன்ஸ்பெக்டர் மீதான நடவடிக்கை ஏன் என்பது தெரியவில்லை.
ராமமூர்த்தி (அ.தி.மு.க.,): சுமூக தீர்வு காண முயற்சித்து, போலீசார், ஐஸ்வர்யாவை பெற்றோருடன் அனுப்பியுள்ளனர். ஊருக்கு சென்ற பின் அங்கு நடக்கும் செயலுக்கு பல்லடம் போலீசார் எப்படி பொறுப்பேற்க முடியும்? தேவையின்றி இன்ஸ்பெக்டர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்வரமூர்த்தி (காங்.,): இளம்பெண் மற்றும் பெற்றோரிடம் கையொப்பம் பெற்று அவர்களின் ஒப்புதலுடன் தான் போலீசார் அப்பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இன்ஸ்பெக்டர் மீதான நடவடிக்கை தவறாக தெரிகிறது. மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பரமேஸ்வரன் (மா.கம்யூ.,): கடந்த காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் அதிகம் நடந்துள்ளன. கூடுதல் கவனம் செலுத்தி, சரியான விசாரணை நடத்தி இருக்க வேண்டும். எனவே, உடனடி சஸ்பெண்ட் நடவடிக்கை எனும்போது, போலீஸ் மீதான நடவடிக்கை சரி என்றே தோன்றுகிறது.
ரவிச்சந்திரன் (ம.தி.மு.க.,) காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிய பின் தான் பெற்றோரோடு அனுப்ப முடியும். இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் போலீசார் சுதந்திரமாக செயல்படுவதை தடுத்துவிடும். காவல்துறையின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது.
லோகநாதன் (ஹிந்து முண்ணனி): பெண்ணின் சம்மதத்துக்கு இணங்க, நன்கு வாழட்டும் என்ற எண்ணத்துடன் போலீசார், பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இதன் பிறகு ஊரில் நடந்த கொலை சம்பவத்துக்கு பல்லடம் போலீசாரை குறை கூறுவது சரியானதாக இல்லை. இதுகுறித்து கூடுதல் விசாரணை நடத்த வேண்டும்.

