ADDED : ஜன 26, 2024 11:49 PM

திருப்பூர்: திருப்பூர் கால்பந்து கிளப் சார்பில், கால்பந்து போட்டி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நேற்று துவங்கியது.
சென்னை, திருப்பூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பொது பிரிவில், 12 அணிகள், மூத்தோர் பிரிவில், 16 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த பொதுப்பிரிவு போட்டியின் லீக் சுற்று முடிவில் நடந்த முதல் காலிறுதி போட்டியில், மவுன்ட்லிட்ரா ஸீ கால்பந்து அணி, 6 - 5 என்ற கோல் கணக்கில், இளையான்குடி 'இசட்.எச்.சி.,' அணியை வென்றது.
இரண்டாவது காலிறுதிப் போட்டியில், நீலகிரி கால்பந்து கிளப் அணி, 5-0 என்ற கோல் கணக்கில் சூலுார் எஸ்.ஆர்.எப்.சி., அணியை வென்றது. இன்று காலை, 6:30 மணி முதல், 40 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோர் பிரிவுக்கான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. கால்பந்து போட்டி ஏற்பாடுகளை, திருப்பூர் கால்பந்து கிளப் தலைவர் ஜெயசந்திரன், செயலாளர் சேவியர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

