/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவிலில் திருடியவர் சிறையில் அடைப்பு
/
கோவிலில் திருடியவர் சிறையில் அடைப்பு
ADDED : பிப் 24, 2024 12:18 AM

திருப்பூர்;தாராபுரம் அருகே மூலனுார், சாலராப்பட்டி மாரியம்மன் கோவிலில், கடந்த டிச., மாதம் கோவில் கதவு உடைத்து அரை பவுன் தங்கம், அரை கிலோ வெள்ளி கிரீடம் ஆகியன திருடு போனது. கடந்த ஜன., மாதம் மூலனுார் மாமரத்துப்பட்டியில் கந்தசாமி என்பவர் வீட்டு பூட்டு உடைத்து 80 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது.
மூலனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் நாச்சிபாளையம் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அதில், மதுரை, மேலுாரைச் சேர்ந்த எலி என்கிற பிரசாத், 28 என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இந்த விசாரணையின் போது அந்த இரு திருட்டு சம்பவங்களிலும் அவர் ஈடுபட்டது தெரிந்தது. அவரிடமிருந்து அரை கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் அவர் தாராபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.